இயற்கையாக உருவான வெந்நீர்ஊற்று ஃப்ளை கீசர்: வியப்பூட்டும் காட்சிகள்!

மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட வித்தியாசமான இடம் தான் ஃப்ளை கீசர் என அழைக்கப்படும் இயற்கையாக உருவான இந்த வெந்நீர்ஊற்று.

அமெரிக்காவின் வடக்கு நெவாடாவில் உள்ள பிளாக் ராக் பாலைவனத்தில் ஃப்ளை கீசர் அமைந்துள்ளது.

20ம் நூற்றாண்டில் நீர்ப்பாசனம் செய்வதற்காக, இங்கு ஒரு கிணறு தோண்டி பூமிக்கு அடியில் தண்ணீரை கண்டுபிடித்தனர். ஆனால் இந்த தண்ணீர் 200 டிகிரி பாரன்ஹீட்டுடன் கொதித்துக் கொண்டிருந்தது.

பயன்பாட்டுக்கு ஏற்ப இந்த தண்ணீர் இல்லாததால் மக்கள் கிணறை அப்படியே விட்டு விட்டனர்.

பின்னர் பல ஆண்டுகளாக கிணற்றிலிருந்து சூடான தண்ணீர் தொடர்ந்து வெளியேறியது. இதிலிருந்து கால்சியம் கார்பனேட் மற்றும் கரைந்த கனிமங்கள் உருவாகின.

இந்த கனிமங்கள், நீரூற்றை சுற்றி மேலும் மேலும் படிந்து ஒரு மலைபோல் காட்சியளிக்கிறது. கனிமக் கட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பல அங்குலங்கள் வளர்ந்து வருகிறது.

கால்சியம் கார்பனேட்டில் வளரும் தெர்மோபிலிக் ஆல்கே (Thermophilic Algae) உருவானது. இதனால், சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் நீரூற்று மாற்றியது.

இயற்கையின் அற்புதத்தால் சுற்றுலாத்தலமாக மாறிய, இந்த வானவில் நிற வெந்நீர்ஊற்று ஆறு அடி உயரத்தில் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.