தமிழகத்தில் 2023 - 24ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை பச்சை துண்டு அணிந்து தாக்கல் செய்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்.

127 லட்சம் மெட்ரிக் 'டன்' தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு. 2,504 ஊராட்சிகளில், 230 கோடி ரூபாயில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும்.

அதிகமாக சிறுதானியம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு. 50 ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக சிறுதானிய உற்பத்தி செய்ய நடவடிக்கை. ரேசன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும்.

200 வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் துவங்க, 2 லட்சம் ரூபாய் கடன் உதவி.

ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்று பயிர் சாகுபடிக்கு, 16 கோடி ரூபாயும், நெல்லுக்கு பின் மாற்று பயிர் சாகுபடிக்கு, 24 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஆதி திராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்.

பயிர்காப்பீட்டு மானியத்துக்கு, 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 30 கோடி ரூபாயில் பயறு பெருக்கு திட்டம்.

தென்னை வளர்ச்சி மேம்பாட்டுக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அடைய தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம்.

பனை சாகுபடியை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

4, 300 ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை மல்லிக்கு தனி இயக்கம் தொடக்கம்.

தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.