சரும பராமரிப்பில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியதென்ன?

பொலிவான தோல், அழகான தோற்றம் என்பது வெறும் அழகு சார்ந்த விஷயமல்ல. தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், தைரியத்தை கொடுக்கும் மிக முக்கியமான ஒன்று.

தோற்றம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வால் பலர் உளவியல் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

தோல் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சை என்பது, மன ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், இது ஆடம்பரமானது அல்ல.

சருமத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், சுயமாக மருந்துக்கடைகளில் கிரீம்களை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உரிய தோல் சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

பிற நோய்களை போன்று, சுய மருத்துவம் என்பது சரும பிரச்னைகளுக்கும் செய்யக்கூடாது.

சில நேரங்களில் நம் உடலிலுள்ள பெரிய நோய்களின் அறிகுறிகள், தோலில் வெளிப்படும். இதனை டாக்டர்கள் எளிதில் கண்டறிந்து விடுவார்கள்.