உஷார்... ஆபத்தையும் தரும் இந்த உணவுப்பொருட்கள் !
உணவு என்பது வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது. ஆரோக்கியமான உணவுகள் அனைத்தும் நன்மையை மட்டுமே அளிப்பதில்லை.
உடலுக்கு தீங்கு அளிக்கக்கூடிய நஞ்சுத் தன்மைகள் ஒரு சில உணவுகளில் உள்ளன. இவை சாப்பிட்ட உடனேயே உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை.
இருப்பினும், எதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உஷாராக இருக்க வேண்டியுள்ளது. எனவே, ஆபத்தை தரக்கூடிய உணவு வகைகள் குறித்து பார்க்கலாம்...
உருளைக்கிழங்கின் தண்டு, இலைகளில் நச்சுத்தன்மைகள் உள்ளன. பச்சையாக இருந்தால் இதில் கிளைகோல்கலாய்டு எனும் விஷம் நிறைந்திருக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும்.
தக்காளி... இச்செடியின் தண்டு, இலைகளில் கிளைகோல்கலாய்டு விஷம் உள்ளதால், எதிர்பாராவிதமாக சாப்பிட்டால், நரம்புத்தளர்ச்சி, வயிற்று உப்புசம் ஏற்படலாம்; மரணத்துக்கும் வழிவகுக்கும்.
ஆப்பிளுடன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு கேடு விளைவிக்கும். இதிலுள்ள 'அமிக்டலின்' தலைச்சுற்றல், வாந்தி, ரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, கோமா, மரணத்துக்கு வழிவகுக்கும்.
ஒருசில காளான்களில் (வெப்கேப்கள், கோனோசைப் ஃபிலாரிஸ்) இயற்கையாகவே நச்சுத்தன்மைகள் நிறைந்துள்ளன. எனவே, சரியான காளான்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் ஆபத்தையும் விளைவிக்கும். அப்படியே சாப்பிடுவதை விட, தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்கியோ, வறுத்தோ சாப்பிடலாம்; இதிலுள்ள விஷம் வெளியேறிவிடும்.
விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு விதைகளில் உள்ள 'ரிசின்' என்ற விஷத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.