மகாராஷ்டிராவில் உள்ள 5 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்

இந்தியாவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் அதிக எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் தான் உள்ளன.

இங்கு பழங்கால குகைகள் முதல் பிரமாண்டமான கோட்டைகள் மற்றும் இயற்கை அதிசயங்கள் என பாரம்பரியத்தின் பொக்கிஷத்தால் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. அவற்றில் சில...

இந்திய பாரம்பரியம், வரலாற்றை நினைவு கூறுகின்றன அவுரங்காபாத்திலுள்ள அஜந்தா குகைகள். இங்கு மலைச்சரிவுகளில் 30 குடைவரைக் கோவில்கள் அழகாக வீற்றிருக்கின்றன.

அவுரங்காபாத்தில் உள்ள எல்லோரா குகைகள் பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றன. பாறை வெட்டப்பட்ட கட்டடக்கலைக்கு பிரபலமானது. 34 குகைகளில், கைலாச கோவில் தனித்து நிற்கிறது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்... முக்கிய போக்குவரத்து மையமாக மட்டுமின்றி, மும்பையின் வளமான காலனித்துவ பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் யுனெஸ்கோ தளமாக உள்ளது.

எலிபெண்டா குகைகள்... சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பழமையான பாறை வெட்டப்பட்ட கோவில்கள், அழகிய புடைப்புச்சிற்பங்கள் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய இயற்கை அதிசயம், மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்லுயிர், பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலைக்கான பங்களிப்புக்காக புகழ்பெற்றவை.

குளிர்காலம் இந்த இடத்தை சுற்றிப்பார்க்க உகந்த நேரமாகும். எனவே, வானிலை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும் அக்., முதல் பிப்., வரை மகாராஷ்டிராவுக்கு விசிட் செய்யலாம்.