தற்கொலை எண்ணம் உடல், மனம், குடும்பம், வேலை, சமூக ரீதியாக மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணங்களால் பின்னிப்பிணைந்துள்ளது.
மேலும் மன அழுத்தத்தால் உண்டாகும் விரக்தியே, நாளடைவில் தற்கொலை எண்ணமாக உருமாறும்.
'என்னடா வாழ்க்கை இது' என்ற எண்ணம் ஏற்படுத்தும்போது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசி மனக்குழப்பங்களுக்கு முதலில் நீக்க வேண்டும்.
குறிப்பாக பெற்றோர், சகோதரர், நண்பர், காதலர் எனத் தங்கள் மனம் முழுமையாக நம்பும் நபரிடம், தங்களுக்குள் இருக்கும் பிரச்னையை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உதவி கேட்க வேண்டும்.
அதீத மன அழுத்தத்தில் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லலாம்.
நல்லது கெட்டதை முழுமையாக உணர்ந்து முன்னேற வேண்டிய பருவத்தில், மாணவர்களுக்கும் ரிசல்ட் சமயத்தில் இந்தத் தற்கொலை எண்ணம் தொற்றிக்கொள்ளும். கவனமாக அவர்களை பெற்றோர்கள் கையாள வேண்டும்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, 24 மணி நேர சேவை எண்ணதிற்கு ஒரு முறை அழையுங்கள்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)