வணிகமயமான காதலர் தினம்…

இன்று உலகம் முழுக்க காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் காதலர்கள் கைகோர்த்து உலா வருகின்றனர்.

காதலர் தினம் வியாபாரிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டும் வணிக தினமாக உள்ளது என்பது பலரும் அறியா விஷயம்.

3ம் நூற்றாண்டில் இத்தாலியில் காதலர்களுக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த புனிதர் வேலன்டைன் மறைந்த பிப்.,14 ஆம் தேதியே ஆண்டுதோறும் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1800-களின் மத்தியில் அமெரிக்காவில் காதலர் தினம் பல்வேறு வியாபாரிகளின் ஆதர்ச தினமாகப் பார்க்கப்பட்டது.

இதனாலேயே இதயச் சின்னம் கொண்ட டி-ஷர்ட், பலூன்கள், டெடி பியர், காபி மக் என ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் விற்பனையாகின்றன.

அதேபோல் காபி ஷாப்கள், மால்கள், ஐஸ்கிரீம் ஷாப்கள், திரையரங்குகள் காதலர்களால் நிரம்பி வழிகின்றன.

மேலும் சிறு வியாபரிகளுக்கு இந்த நாளில் சாக்லேட், கேக், ரோஜா உள்ளிட்ட மலர்கள் பொக்கே ஆகியவற்றின் விற்பனையும் சூடுபிடிக்கும்.