சுற்றுலா வருவாயை உயர்த்த இலங்கையின் சூப்பர் பிளான்!
இரண்டரை கோடி மக்கள் கொண்ட நமது அண்டை நாடான இலங்கை சுற்றுலா வருவாயை பிரதானமாக கொண்டிருக்கிறது.
சுற்றுலாத் துறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்ட் பொழுதுப்போக்கு பூங்காவை அம்பாந்தோட்டையில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இலங்கை மக்கள், உணவு, மருந்து மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் கூட பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.
பொருளாதாரத்தை சரி செய்ய ஒரே வழி சுற்றுலா பயணிகளை அதிகளவு ஈர்த்து அந்நியச் செலாவணி இருப்பை உயர்த்துவது தான்.
இதனை செயல்படுத்த அமெரிக்காவின் டிஸ்னி லேண்ட் நிறுவன குழு இலங்கையில் உள்ள 'அம்பாந்தோட்டை' என்ற இடத்தில் ஆய்வு செய்துவிட்டு சென்றிருக்கிறது.
டிஸ்னி லேண்ட் பொழுதுப்போக்கு பூங்கா குழந்தைகள், சிறார்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வமாக சென்று வரும் இடம்.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டுக்கு ஆண்டு தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகைப் புரிகின்றனர்.
அம்பாந்தோட்டை என்ற இடத்தில் ஏற்கனவே இலங்கையின் சுற்றுலாத்துறை புகழ்பெற்ற 'யால் தேசிய பூங்கா' அமைத்துள்ளது.