மூங்கில் எனும் அற்புத தாவரம்! இன்று உலக மூங்கில் தினம்...

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மூங்கில் பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்., 18ல் உலக மூங்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மூங்கில், மிக வேகமாக வளரும் தாவரம். உலகில், 250 கோடி மக்கள், மூங்கில்களை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

மூங்கில்களுக்கு இயற்கையிலேயே பாக்டீரியா, பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி இருக்கிறது.

அறைகலன், காகிதம், வீடு கட்டுமானம் என, மூங்கில்களை 10 ஆயிரம் விதமாக பயன்படுத்த முடியும்.

ஒரு எக்டர் மூங்கில் காடு, காற்றில் இருந்து, 12 டன் கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொள்கிறது; மற்ற மரங்களை விட, 35 சதவீதம் கூடுதல் ஆக்சிஜனை வெளியிடுகிறது.

உலகின் மொத்தம், 1,662 வகை மூங்கில் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், இந்தியாவில், 148 வகை இனங்கள் உள்ளன.

இதன் ஆயுட்காலம் 60 ஆண்டுகள். ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.

இந்தியாவில் 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.