வீட்டின் வெளியே இருந்து நம்பிக்கை: இன்று உலக அகதிகள் தினம்

உலகில் 6 கோடி பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். நிமிடத்துக்கு 20 பேர் வீட்டை விட்டு வெளியேறி மற்ற பகுதி, நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

86 சதவீத அகதிகள் வளரும் நாடுகளில் உள்ளனர். உலகின் பெரிய அகதிகள் முகாம் (3.29 லட்சம் பேர்) கென்யாவின் ததாப் நகரில் உள்ளது.

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

இந்த ஆண்டு தீம் "அனைவரும் வரவேற்கிறோம்." அகதிகளை ஆதரிப்பதில் உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.