புகையால் ஒரே ஆண்டில் 5.5 லட்சம் பேர் உயிரிழப்பு.. ஆய்வில் அதிர்ச்சி

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்வ சாதாரணமாக புகைப்பது, சரக்கு அடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், புகை புகைப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலக் கோளாறுகள் குறித்து ஜோத்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு நடத்தியது.

அதில், இந்தியாவில் புகை பிடிப்பதால் கடந்தாண்டில் மட்டும் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நாட்டில் 7.7 % மக்கள் புகையிலை பயன்படுத்துகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிராவில் 50 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 42 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.

புகைப்பதால் 0.39% நுரையீரல் புற்றுநோயும், 0.20% காசநோயும், 0.32% வாய் புற்றுநோயும், 0.17 % இதய பாதிப்பும் ஏற்படுகிறது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிகரெட்டை விட பீடி குறைந்த விலையில் கிடைப்பதால் அதிக பேர் பயன்படுத்துகின்றனர் என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.