மழை காலத்தில் மின் அதிர்ச்சியிலிருந்து தப்பிக்க...டிப்ஸ்...

மின் கம்பிகள் செல்லும் இடங்களுக்கு அருகில் உள்ள மரங்கள், கிளைகளை பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் வெட்டகூடாது. வெட்டும் முன், மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கவும்.

மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள் மற்றும் மின் இழுவைக் கம்பிகள் அருகில் செல்லக் கூடாது

தேவையில்லாமல் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்கவும். அவசியம் போக வேண்டும் என்றால், ரப்பர் காலுறைகளை அணிந்து செல்வது பாதுகாப்பானது.

சுவர்களில் ஈரம் கோர்த்து இருக்கும் போது சுவிட்ச் மற்றும் பிளக் பாயின்ட்டுகளைப் பயன்படுத்த கூடாது. அங்கே இருக்கும் மின் சாதனங்களை மழை நாட்களில் தொடாமல் தவிர்ப்பது நல்லது

 வீட்டில் பயன்படுத்தும் மின் சாதனங்கள் எதிலாவது, 'ஷாக்' அடிப்பதை உணர்ந்தால், உடனடியாக உலர்ந்த ரப்பர் செருப்பை கால்களில் அணிந்து, மெயின் கவிட்சை அணைக்கவும்.

 இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் 'டிவி' போன்ற மின் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது

வீடுகளில் மின் இணைப்பு பெறும்போதே, 'எர்த் லீக்கேஜ்' வசதிகளைச் சரியாகச் செய்ய வேண்டும். மின் இணைப்பில், 'சர்க்யூட் பிரேக்கர்'களும் பொருத்தப்பட வேண்டும்.

ஒரே பிளக் பாயின்ட்டில் பேன், மொபைல்போன் சார்ஜர், கம்ப்யூட்டர் என, எல்லாவற்றின் பிளக்கையும் சொருகக் கூடாது. அதிக மின் பயன்பாடு, அவற்றை வெடிக்கச் செய்யும்.