மனதை மயக்கும் மங்கோலியா - குறைந்த பட்ஜெட்டில் கண்டு களிக்கலாம்...!

மனதை மயக்கும் மத்திய பட்ஜெட் ஆசிய சுற்றுலாத் தலம் மங்கோலியா. விமான டிக்கெட் கட்டணத்தையும் சேர்த்து ஓர் இந்திய தம்பதி 70 ஆயிரம் ரூபாய்க்குள் இந்தியாவில் இருந்து மங்கோலியா சென்று வரலாம்.

மங்கோலியா ஒரு சிறிய நாடுதானே, அங்கு சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். அது தவறு. ஆடம்பர சுற்றுலாத் தலங்களில் இல்லாத பல இடங்களும் வரலாற்று சின்னங்களும் மங்கோலியாவில் உள்ளன.

சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே அமைந்துள்ள ஓர் சிறிய நாடு மங்கோலியா. காலாகாலமாக இந்தியாவுடன் நட்பு பாராட்டி வரும் நாடு. இந்தியாவுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு இது.

இங்குள்ள உலகப் புகழ் பெற்ற கோபி பாலைவனத்தில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் தோன்றிய காலத்தில் இட்ட முட்டையின் கற்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஃபிளெம்மிங் கிளஃப் சிவப்பு நிற மலைப்பகுதியில் டிரெக்கிங் பிரியர்களுக்கென்று தனி வசதி உள்ளது. தனிமையில் பொழுதைப் போக்க வரும் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற இடம் இது.

கொன்கொரின் எல்ஸ் மணல் மேடுகள் மங்கோலியாவின் பாடும் பாலைவனமாக கருதப்படுபவை. இங்கு மாலை நேரத்தில் காற்று வீசும்போது காற்றின் ஓட்டத்துக்கு ஏற்ப ஒலி கேட்கும்.

மங்கோலியாவின் மலை உச்சியில் அமைந்துள்ள மங்கோலிய மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் காலத்தில் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் சைசான்.

கண்டன்டெக்சின்லென் புத்தர் கோவிலில் 26 அடி உயரமுள்ள அவலோகிடேஸ்வரா மஞ்சள் உலோக சிலை மிகவும் புகழ்பெற்றது.

கோபி பாலைவனத்தை ஒட்டிய யோல் பள்ளத்தாக்கு உள்ளே செல்லசெல்ல மிகக் குறுகலாக இருக்கும். கோடை காலத்தில் கூட அடியில் குளிர்ச்சியுடன் இருக்கும். பனிக்கட்டிகள் ஆங்காங்கே காணப்படும்.