இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்!
பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, உரிமை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன.24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2008ல் இத்தினம் உருவாக்கப்பட்டது.
ஆண் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி, சுகாதாரம், சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும், பெண் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.
பெண் குழந்தையை சுமையாக கருதாமல், அவர்களை கொண்டாடும் தற்போதைய இளம் தலைமுறை பெற்றோர்களால் சமூகத்தின் பார்வை மாறத் தொடங்கி இருக்கிறது.
அவர்கள் இல்லத்திற்கு அச்சாணியாக இருந்து, மகிழ்ச்சியையும், அன்பையும் உருவாக்கும் நீருற்றுகளாக இருக்கிறார்கள்.
குடும்ப வறுமையைப் போக்குவதில், அப்பாவிற்கு தோளோடு தோளாக நின்று வேலைக்கு செல்லக்கூடிய பெண்களும் இருக்கிறார்கள்.
“கற்பு நெறியென்று சொல்ல வந்தால் - அதை இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம்” என்ற பாரதியின் வரிகளைப் பின்பற்றுவோம். பெண் குழந்தைகளைப் போற்றுவோம்!