காஞ்சிப்பெரியவரின் கனிவான சிந்தனைகள்...
அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது.
மற்றவர் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலையான பயன் உண்டாவதில்லை.
நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.
வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
தேவையை அதிகரித்துக் கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையுடன் இருக்கப் பழகுங்கள்.
போட்டி மனப்பான்மை இருக்கும் வரை, மனித வாழ்வில் நிறைவு ஏற்படாது.
பணம், பேச்சு எதுவாக இருந்தாலும் அளவு மீறக்கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம் வந்து விடும்.