இந்தியாவில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட பழமையான மலைவாசஸ்தலங்கள்...!
சிம்லா... இந்தியாவின் காலனித்துவத்தின் போது, வெப்பத்திலிருந்து தப்பிக்க, சிம்லா கோடைகால தலைநகராக விளங்கியது. 1815ல் ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றுவதற்கு முன்பு இது ஒரு குக்கிராமமாக இருந்தது.
கொளுத்தும் வெப்பத்திலிருந்து தப்பிக்க கோடைகால ஓய்வு விடுதியாக ஊட்டியை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியுள்ளனர். நீலகிரி மலை ரயில் நிலையம் 1908ல் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முசோரி... 1825ல் இந்த மலைவாசஸ்தலம் அமைக்கப்பட்டது. பசுமை போர்த்திய மலைகள், கொட்டும் நீழ்விழ்ச்சிகளை இங்கு ரசிக்க ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் சிறந்தவை.
டார்ஜிலிங்... பரந்த நிலப்பரப்பு, அழகிய வீடுகள் என வெகுவாக கவரும் இந்த மலைவாசஸ்தலம் 1935ல் அமைக்கப்பட்டது. டார்ஜிலிங் - ஹிமாலயன் பொம்மை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கொடைக்கானல்... 1845ல் கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து தப்பிக்க புகலிடமாக ஆங்கிலேயர்கள் மாற்றினர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 1870ல் அமைக்கப்பட்டது மூணார். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அழகிய மேகங்களை ஆராய்ந்து குளிர்ச்சியை அனுபவிக்கலாம்.
நைனிடால்... 1841ல் இது மலைவாசஸ்தலமாக மாற்றப்பட்டது. காலனித்துவ கட்டடங்கள் மற்றும் நைனி ஏரி இங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.