இந்த அக்டோபர் சீசனுக்கு கேரளாவில் பார்க்க பட்ஜெட்டுக்குள் சில இடங்கள் !

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைப்பிரியர்களின் சாய்ஸாக மூணாறு உள்ளது. மலையைச் சுற்றியுள்ள தேயிலை தோட்டங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

வர்கலா... அழகான கடற்கரையும், உயரமான குன்றுகளும் என தனித்தீவுக்கு சென்ற மாயையை வழங்குகின்றன. இங்கு, படகுச்சவாரி, சன் பாத் என உற்சாகமாக என்ஜாய் செய்யலாம்.

தேக்கடி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது படகுச்சவாரி; வனத்தின் அழகை ரசிக்கும்போது, தாகம் தீர்க்க வரும் யானை, புலி, மான் போன்ற வன விலங்குகளை இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக பார்க்கலாம்.

கோவளம்... தென்னை மரங்கள் படைசூழ இந்த கடற்கரையை பார்ப்பது ரம்மியமான பொழுதுபோக்காகும். கடல்வாழ் உயிரினங்களை விரும்புபவர்களுக்கு இது சொர்க்கமாக திகழ்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மற்றொரு சுற்றுலாத்தலம் வயநாடு. அழகிய நீர்வீழ்ச்சிகள், குகைகள் மட்டுமின்றி அதிர்ஷ்டமிருந்தால் வன விலங்குகளையும் ரசிக்கலாம்.

பேக்வாட்டர் எனப்படும் உப்பங்கழிக்கு பெயர் பெற்ற ஆலப்பி என்ற ஆலப்புழாவில், பேக்வாட்டரின் பின்னணியில் மிதந்து செல்லும் படகுவீடுகளில் செல்லும் போது கிடைக்கும் அனுபவமே தனிதான்.