கிரெடிட் கார்டு... ரிவார்டு பாயின்ட் - கேஷ்பேக் என்ன வேறுபாடுகள்?
கேஷ்பேக்... இது நேரடியான பணப்பலன். நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போது, அந்தத் தொகையின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்கள் கார்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.
இது எளிமையானது மற்றும் பயன்படுத்த எளிதானது.
பெரும்பாலான கேஷ்பேக் கார்டுகளுக்கு, அதிக செலவு வரம்பு அல்லது சில பிரிவுகளுக்கு மட்டுமே கேஷ்பேக் போன்ற நிபந்தனைகள் இருக்கலாம்.
ரிவார்டு பாயின்ட்... நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகைக்கும் பாயின்டுகள் வழங்கப்படும்.
இந்த பாயின்டுகளைப் பயன்படுத்தி, விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள், பரிசு வவுச்சர்கள் அல்லது பொருட்களை வாங்கலாம்.
ரிவார்டு பாயின்டுகளைப் பயன்படுத்தும் முறை சற்று சிக்கலானது. சில சமயம், குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தவில்லை என்றால், அவை காலாவதியாகிவிடும்.
பயணத்தை விரும்புவோர் மற்றும் அதிக செலவு செய்வோருக்கு இது அதிக பலனைக் கொடுக்கும். சரியாகப் பயன்படுத்தினால், கேஷ்பேக்கை விட அதிக மதிப்பு பெற முடியும்.
உங்கள் செலவு பழக்கவழக்கங்கள், முன்னுரிமைகளைப் பொறுத்து, கேஷ்பேக் அல்லது ரிவார்டு பாயின்டுகளில் எதை தேர்வு செய்வது என முடிவு செய்யலாம்.
நீங்கள் தினசரி செலவுகளுக்கு கார்டைப் பயன்படுத்துபவராக, எளிமையான பலன்களை விரும்புபவராக இருந்தால், கேஷ்பேக் கார்டுகள் சிறந்தவை.
அடிக்கடி பயணம் செய்தாலோ, பிராண்டட் பொருட்கள், விமான டிக்கெட்டுகளையோ பாயின்டுகள் வாயிலாக வாங்க விரும்பினாலோ ரிவார்டு பாயின்டுகள் கொண்ட கார்டுகள் பயன் தரும்.