இன்று தேசிய பத்திரிகை தினம்

ஆண்டு தோறும் நவ., 16ல் (இன்று) தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' அமைப்பு 1966, நவம்பர் 16ல் நிறுவப்பட்டது.

பத்திரிகைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பது, அதன் செயல்பாடுகளை கண்காணித்தல், தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல் போன்றவை 'பிரஸ் கவுன்சிலின்' முக்கிய பணி.

ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி மிகவும் முக்கியமானது.

செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு சரியான பாதையை வகுத்துக் கொடுப்பது என பல பொறுப்புகள் பத்திரிகைக்கு உண்டு.

மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதில் பங்காற்றுகிறது.

சமூகத்தின் கண்ணாடியாக பத்திரிகையாளர்கள் உள்ளனர்.