இன்று உலக தொலைக்காட்சி தினம்!

உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஐ.நா., சார்பில் நவ., 21ல் உலக 'டிவி' தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்றைய 'டிவி'யில் இணையம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

உலகில் எந்தவொரு இடத்தில் நடக்கும் சம்பவங்கள், அறிவாற்றல் வளர்க்கும் விஷயங்களை வீடுகளின் வரவேற்பறைக்குள் கொண்டு வரும், தொழில்நுட்ப புரட்சி தொலைக்காட்சி.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது போல், ஒரு காலத்தில் அமிர்தமாய் தித்தித்த தொலைக்காட்சி, இன்று, திகட்டும் தொல்லைக் காட்சியாக மாறிப் போயிருக்கிறது

காலம் கடந்தாலும், தொலைக்காட்சி இன்றும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சம், தற்போது டிடிஎச், ஓடிடி என பெரும் வணிகமாகவும், மாறியுள்ளது.

எனவே அதன் நன்மை தீமை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கு தகுந்த நிகழ்சிகளை மட்டுமே பார்க்க வலியுறுத்த வேண்டும்.