காஷ்மீர் முதல் லடாக் வரை.... உலகின் உயர்ந்த சாலை இது !

வாகனப் போக்குவரத்துக்கு உதவும் உலகின் உயரமான சாலை நம் நாட்டில் தான் உள்ளது. இது, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது.

இதற்கு முன், இந்த பெருமையை தென் அமெரிக்க நாடான பொலிவியா தக்க வைத்திருந்தது.

பொலிவியாவில், உட்டுருங்கு எரிமலையை இணைக்க, 18 ஆயிரத்து, 953 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இது உலக அளவில் தனித்துவ அடையாளத்தோடு விளங்கியது.

தற்போது, காஷ்மீர், லடாக் சாலை தனித்தன்மை பெற்றதாக இருக்கிறது.

இங்கு, 19 ஆயிரத்து, 24 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகனப் போக்குவரத்தும் நடக்கிறது.

உலகின் மிக உயரமான வாகனப் போக்குவரத்து சாலை என, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக ரைடிங் செல்ல விரும்பும் இளசுகளின் ஃபேவரீட் பட்டியலில் இந்த சாலை இருப்பது குறிப்பிடத்தக்கது.