வங்கி லாக்கரில் நகையை இழந்தால், திரும்ப பெறுவது எப்படி?
வங்கி லாக்கரில் வைக்கப்படும் தங்க நகைகள் எதிர்பாராத விபத்திலோ, திருட்டு சம்பவத்திலோ, அதனை திரும்ப பெறும் வழிவகைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் நிலவுகிறது.
எதிர்பாராத விபத்து என்பது பொதுவாக இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட சமயங்களில் தான் நடக்கும்.
அத்தகைய நேரங்களில், வங்கியானது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றால் நஷ்ட ஈடு கிடைக்க வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை மணிகளைப் பொருத்தவில்லை, வழக்கமான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பது நிரூபணமானால் தான், வாடிக்கையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும்.
இவையெல்லாம் ஒழுங்காகச் செய்யப்பட்டு இருந்தால், நஷ்ட ஈடு கிடைக்காது.
வங்கியின் பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு, அலட்சியம் அல்லது ஊழியர்களின் தவறான நடத்தை காரணமாக திருட்டு நடந்திருக்க வாய்ப்புள்ளது.
அப்போது, பாதுகாப்பு பெட்டகத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும்.
அந்த பெட்டகத்துக்கு ஆண்டொன்றுக்கு அவர் செலுத்திய வாடகையை போல் 100 மடங்கு நஷ்ட ஈடாக கிடைக்கும்.