வெயில் காலத்தில் மாடித்தோட்டத்தைப் பராமரிக்க சில டிப்ஸ்...
கோடையில் மாடித்தோட்டத்தை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவை எளிதில் பட்டுப்போகிவிடும். அவற்றை பாதுகாக்க சில வழிகளை பார்ப்போம்.
இது வரை ஒருநாள் விட்டு மறுநாள் தண்ணீர் ஊற்றினால் இனி இரு வேளை கண்டிப்பாக தண்ணீர் உற்ற வேண்டும்.
அதற்காக செடியின் தொட்டி நிரம்பத் தண்ணீர் ஊற்ற வேண்டாம். மாறாக தண்ணீரைத் தெளிக்க வேண்டும். பூவாளியைப் பயன்படுத்துவது மிக உகந்தது.
எப்போதும் ஈரப்பதம் இருக்க தண்ணீர் ஊற்றும்போது அடிப்புறத்தில் தேங்காய் நார் இருக்க செய்யவும். இவை தண்ணீரைத் தக்க வைத்துக்கொள்ளும்.
மேலும் செடியின் மேல் புறத்திலும் தேங்காய் நாரை சிறிது சிறிதாக வெட்டி தூவி விடவும். இதனால் அதிக வெப்பம் உள்ளே போகாது.
நீர்த் தட்டுப்பாடு இருந்தால் மாடித்தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனமும் அமைக்கலாம்.
கோடையில் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும். அப்போது இயற்கை பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும். மேலும் செடிகள் நன்கு வளர பஞ்சகவ்யாவை தெளிக்கலாம்.
குறிப்பாக வேப்ப எண்ணெய் கரைசலை நீரில் கலந்து வேர் பகுதியில் தெளித்தால் அதன் ஆழத்தில் இருக்கும் புழுக்களின் தாக்குதலை தடுக்கலாம்.