ராம நவமி; அயோத்தியில் குவிந்த பக்தர்கள்.. மங்கள ஆரத்தியிடன் துவங்கியது ராமர் தரிசனம்

அயோத்தியில் இன்று 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக துவங்கியது.

அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏப்ரல் 16 முதல் 18 வரை தரிசனம், ஆரத்தி போன்ற அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும்.

மங்கள ஆரத்தியில் துவங்கி இரவு 11 மணி வரை தரிசனத்தின் காலம் 19 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரசாதத்தின் போது ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே திரை மூடப்படும்.

சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ம் தேதிக்குப் பிறகு மட்டுமே தரிசனத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் சுமார் நூறு பெரிய LED திரைகளில் ஒளிபரப்பப்படுகிறது.

இன்று விழாவின் 9ம் நாளன்று ராம் லல்லாவின் சூர்யா அபிஷேக மஹோத்ஸவம் நடைபெற உள்ளது. ராமரின் நெற்றில் சூரிய ஒளிபடும் மங்களகரமான நிகழ்வை காண பக்தர்கள் காத்திருக்கின்றனர்.