பயணங்களில் வயிற்றுப்போக்கை தவிர்க்க டிப்ஸ்!
பயணங்களில் வயிற்றுப்போக்கை தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் போதும். அவை என்னென்ன என அறிந்துக்கொள்வோம்!
வெளி இடங்களில் விற்கப்படும், ஈக்கள் மொய்த்த தின்பண்டங்கள், கையுறை அணியாமல் எடுத்துக் கொடுக்கப்படும் உணவுப் பொருட் களைச் சாப்பிடக் கூடாது.
பழச்சாறு குடிக்கும் போது, சாறு தயாரிக்க பயன்படும் ஜூசர் கருவி சுத்தமானதாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
அதில் போடப்படும் ஐஸ் துண்டு, சுத்தமான தண்ணீரில் தயாரிக்கப்பட்டதா என் பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வேக வைக்காத உணவை சாப்பிடக் கூடாது. மிக சூடாக இருக்கும் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
சுத்தமில்லாத பாத்திரத்தில் சமைத்த உணவுகள், சாப்பிடும் தட்டு, தண்ணீர் குடிக்க பயன்படும் தம்ளர் ஆகியவை சரியாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளியில் செல்லும் போது, மினரல் வாட்டரோ, மிக சூடாக உள்ள டீயோ, காபியோ தான் குடிக்க வேண்டும்.