இன்று அரவிந்தர் பிறந்த தினம்!
தோல்வி என்பதே கிடையாது. இலக்கை நோக்கிய பயணத்தில், கொஞ்சம் சுற்றி வளைத்துச் செல்வதாகவே பொருள்.
கல்லில் கடவுளைத் தேடுவதில் பயன் இல்லை. உயிர்களில் எல்லாம் நிறைந்து இருக்கின்ற கடவுளைத் தேடுங்கள்.
உடம்பை நோயற்றதாக ஆக்க முடியும் என்பது சாத்தியமானது என்றால், சமுதாயத்தை வறுமையற்றதாக ஆக்குவதும் சாத்தியம் தான்.
அன்பும், சக்தியும் இணைந்தால் தான் உலகைக் காப்பாற்ற முடியும். அவை தனித்தனியே இருந்தால் உலகைக் காப்பாற்ற முடியாது.
தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுங்கள். செய்யும் செயல்களை வேள்வி ஆக்குங்கள்.
மனதில் எப்போதும் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கட்டும். அமைதியே அகவாழ்வையும், புறவாழ்வையும் இணைக்க வல்லது.
எதைச் செய்தாலும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வோடு செய்.