சென்னையில் சாகச சுற்றுலா போலாமா....!

சென்னைக்கு அருகில் அருவிகள், டிரெக்கிங் ஸ்பாட் என த்ரில் அனுபவங்களை தரும் இடங்கள் சிலவற்றை இங்கே காண்போம்.

சென்னையிலிருந்து 90 கி.மீ., தொலைவில், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது நாகலாபுரம். ஒரு நாள் சுற்றுலா சென்றுவர இது சிறந்த இடம். இந்த மலைப்பிரதேசத்தில் மொத்தம் 5 அருவிகள் உள்ளன.

தடா அருவி சென்னையிலிருந்து 92 கி.மீ., தொலைவில், சித்தூர் மாவட்டம் வரதப்பாளையம் அருகில் அமைந்துள்ளது. டிரெக்கிங் போக விரும்பினால் 10 கி.மீ., தொலைவு பயணம் செய்து, அருவி உருவாகும் மலைப்பகுதியை அடையலாம்.

சென்னையிலிருந்து 100 கி.மீ., தொலைவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காஞ்சனகிரி மலைகள் அமைந்துள்ளது.சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு நீங்கள் மலையேற்றம் போகலாம்.

சென்னையிலிருந்து 192 கி.மீ., தொலைவில், நெரபைலு கிராமத்துக்கு அருகில் தலகோனா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பசுமையால் சூழப்பட்ட அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கைலாசகோனா நீர்வீழ்ச்சி சென்னையிலிருந்து 90 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த பட்டியலிலே மிகவும் குறைந்த தூரம் டிரெக்கிங் கொண்ட இடம் இதுதான்.