20 லிட்டர் வாட்டர் கேன் சுத்தமாக இருந்தால் மட்டுமே குடிக்கணும் !
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் இடங்களிலுள்ள பணியாளர்கள் ஆண்டுக்கொரு முறை ஹெபடிடிஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
கைகளை
சுத்தமாக கழுவிய பின்பே தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் சேகரிக்க
வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவ்வப்போது உணவு பாதுகாப்பு
துறையினர் ஆய்வு செய்வர்.
20 லிட்டர் கேன்களின் குடிநீர் மாதிரிகளில் 'மோல்டு' எனும் பூஞ்சை உட்பட பல்வேறு கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, 20 லிட்டர் கேன்களை அதிகபட்சம் 10 முதல் 15 முறை வரை சுத்திகரித்து தண்ணீர் நிரப்பி வீடுகளுக்கு அனுப்பலாம்.
பழைய கேன்கள் பழுப்பு நிறமாகவோ தேய்ந்து பளபளப்பு குறைந்திருந்தாலோ அவற்றை வேண்டாம் என நுகர்வோர் திருப்பி அனுப்பலாம்.
இதன் மூலம் குறிப்பிட்ட தயாரிப்பு யூனிட்டில் உள்ளவர்கள் பழைய கேன்களை மறுசுழற்சிக்கு அனுப்ப ஏதுவாக இருக்கும்.
கேன்
தண்ணீர், பாட்டில் தண்ணீரின் தரம் குறைந்திருந்தாலோ, வயிற்றுப் போக்கு
ஏற்பட்டாலோ உடனடியாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு புகாரளிக்க வேண்டும்.