நீங்கள் யார் என்பதை சொல்லும் கால் வளைவுகள்…
நமது கண்கள், இதழ்கள், தாடை, கால் விரல்கள் நமது குணங்களை, திறமைகளை பெரும்பாலும் சொல்லிவிடும் என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம்.
அதேபோல் கால் வடிவம் உங்கள் தனிப்பட்ட குணாதிசயங்கள், பலம், பலவீனங்கள், இயல்பு, மனநிலை கண்டறிய உதவும் என சிலர் நம்புகின்றனர்.
ஆழமான கால் வளைவுகள் மற்றும் குறைந்த கால் வளைவுகளைக் கொண்டவர்களின் குணாதிசயத்தை பார்ப்போம்.
குறைந்த கால் வளைவு : நீங்கள் யதார்த்தமாக பழகுவீர்கள். வெளிப்படையான போக்கு உள்ளவர்களாக காணப்படுவீர்கள். தனிமையில் இருப்பது உங்களுக்குப் பிடிக்காது.
நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கலாம். இதற்கு கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையை எப்படி வருகிறதோ அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆழமான கால் வளைவு : நீங்கள் நிறைய படிப்பதையும் கற்றுக்கொள்வதையும் விரும்புவீர்கள். நல்ல ஞானம் இருக்கும்.
உங்கள் லட்சியங்கள் மற்றும் கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பீர்கள். நீங்கள் சுயமாக சிந்தித்து புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.
நீங்கள் அடிக்கடி உதவி கேட்க தயங்குவீர்கள். சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்ள உங்களுக்கு நேரம் எடுக்கும்.