உடை நிறங்கள் தேர்ந்தெடுப்பது எப்படி?
நீங்கள் எந்த நிறத்தில் இருந்தாலும் உங்கள் நிறத்தை எடுப்பாக காட்ட சில நிறத்தில் உள்ள உடைகளை தேர்வு செய்வது சிறந்தது என ஆடையியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிலருக்கு குறிப்பிட்ட நிறங்கள் மட்டுமே பிடிக்கும். சிலருக்கோ எல்லா நிறமும் பிடிக்கும். இப்படி பிடித்த நிறங்களில் உடை அணியாமல், நம் சரும நிறத்தின் வகை அறிந்து உடை நிறத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
தோற்றத்தை அழகாக காட்டுவதற்கு ஏற்ற உடைகளின் நிறம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உங்கள் சருமத்தின் நிறம் பால் போன்ற நிறத்தில் இருந்தால் எல்லா வகையான அடர் நிறங்களை நீங்கள் அணியலாம்.
வெளிர் மஞ்சள் நிறம்... இந்த நிறத்தை வார்ம் டோன் (warm tone) சருமம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உங்களுக்கு அனேகநிறங்களும் பொருத்தமாக காட்சியளிக்கும்.
உங்கள் சரும நிறம் மாநிறமாக இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிறங்கள் சருமத்தின் நிறத்தை விட சிறிது அடர் நிறமாகவோ அல்லது சிறிது பிரகாசமான நிறமாக இருக்கலாம்.
நீங்கள் கருப்பு நிறம் உடையவர்கள் எனில், ஒரே நிறத்தில் உடையை அணியாமல், இரண்டு அல்லது மூன்று நிறங்களில், கலந்த கலர் உடைகளை தேர்வு செய்யலாம்.
உங்களுக்கு பொருத்தமான நிறத்தில் உள்ள உடைகளை அணிவதால், தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உங்கள் நிறத்தின் அழகும் மேலும் மிளிரும் என்பதில் அய்யமில்லை.