சண்டைக்கு பின் துணையை மகிழ்ச்சிப்படுத்த 7 ஐடியாக்கள்..!
ஆணோ, பெண்ணோ உங்கள் துணைக்கு மிகவும் பிடித்த உணவை சமைத்து தரலாம்.
உங்கள் மனதில் தோன்றும் அழகான எண்ணங்களை ஒரு கடிதமாக எழுதுங்கள்.
நீண்ட நாட்களாக வாங்க வேண்டுமென எண்ணி கொண்டிருக்கிற ஒரு பொருளை வாங்கி துணைக்கு பரிசாக அளியுங்கள்.
நீங்கள் ஒருவேளை ஓவியம் வரைவதில் திறமைசாலியாக இருக்கும்பட்சத்தில், படைப்புத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஓவியத்தை வரைந்து, அதனை பரிசாக கொடுங்கள்.
உங்கள் துணை ஓய்வாக உணர, தலை, கால் அல்லது உடலுக்கு மசாஜ் செய்துவிடலாம்.
உங்கள் வீட்டின் பல்வேறு இடங்களில் சுவற்றில் குறிப்புகளை எழுதி வைக்கலாம். மன்னிப்பு அல்லது அவர்கள் மறந்துவிட்ட பழைய ஒன்றை நினைவூட்டலாம்.
உங்கள் துணையை அழைத்து கொண்டு, அழகான புதிய இடத்திற்கு செல்லுங்கள், மனம் விட்டு பேசுங்கள்.