இன்று இளைஞர் எழுச்சி தினம்! இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினம்(1931)!

'மக்கள் ஜனாதிபதி' அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்.15, இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. அவரின் பொன்மொழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது, நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல.. உங்களை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு.

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்,வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான். ஒரு புத்திசாலி தான் புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும்போது முட்டாளாகிறான்.

கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், அதை வென்றுவிடலாம்.

நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே, உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை,பல முறை வந்தால் அது லட்சியம்.