கார்கில் வெற்றி தினம் இன்று
இந்தியாவின் லடாக் யூனியனிலுள்ள கார்கில் மலைப்பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர்.
போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கார்கிலில் குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
1999 ஏப்ரலில் பாக்., ராணுவம், பயங்கரவாதிகளுடன் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து 'ஆப்பரேஷன் விஜய்' பெயரில் இந்திய ராணுவம் போரிட்டு வெற்றி கண்டது.
கார்கில் வெற்றி தினமான இன்று அனைத்து ராணுவ வீரர்களுக்கும் சல்யூட் அடிக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகன்களின் கடமையாகும்.