இன்று சர்வதேச நியாயமான விளையாட்டு (பேர் பிளே) தினம்
நட்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, வாய்ப்பளித்தல், பாகுபாடின்மை போன்றவற்றை விளையாட்டிற்கு தேவையான முக்கிய அம்சங்கள்.
அதை ஊக்குவிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 19ல் சர்வதேச நியாயமான விளையாட்டு (பேர் பிளே) தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இது விளையாட்டில் பங்கேற்பவர்களிடம் பரஸ்பர மரியாதை, ஒருவரது திறமைக்கு மற்றொருவர் மதிப்பளித்தலை வெளிக்காட்டுகிறது.
இது சமத்துவத்தை ஊக்குவித்து கலாசார வேறுபாட்டை ஒன்றிணைக்கிறது.
மேலும் விளையாட்டு எவ்வாறு சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இளைஞர்களுக்கு வெளிக்காட்டுகிறது.
குறிப்பாக விளையாட்டில் பாகுபாடின்மை மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்பளிப்பை உறுதி செய்கிறது.