பாலைவன பிரதேசத்தில் முளைத்த சிகரம் : மவுண்ட் அபு

ராஜஸ்தான் என்றால், பாலைவனம் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அங்கு அழகிய மலை வாசஸ்தலமான மவுண்ட் அபுவும் உள்ளது.

பச்சைபசேல் என எழில் கொஞ்சும் இயற்கை அழகு நிறைந்த சிறந்த சுற்றுலா தலமாகவும் இது விளங்குகிறது.

குறிப்பாக காதலர்களுக்கும், ஹனிமூன் தம்பதியினருக்கும் ஏற்ற இடம் என கூறலாம். ஆண்டு முழுவதும் காணத்தகுந்த இடமாக உள்ளது.

மேலும் மழைக்காலத்திலும் மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் அழகையும், மழைப் பொழிவையும் மவுன்ட் அபுவில் காண்பது சிறப்பானது.

அபு மலை ஆரவல்லி மலை தொடரில் கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. புதுடெல்லி, ஜெப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரயில் சேவைகள் உண்டு.

அழகும் ஆன்மிகமும் நிறைந்த இடமாகவும், சாகச உணர்வு கொண்டவர்களுக்கு டிரெக்கிங், படகுச்சவாரி என பல பொழுது போக்கு அம்சமும் நிறைந்த இடமாக உள்ளது.

அபு மலையில் நிறைய இடங்களில் பாறைகள் விலங்குகள், மனித உருவங்கள் போல நம் கண்ணுக்கு தெரியும். அப்படி ஒரு பகுதி தான் தவளைப்பாறை

இங்கு உள்ள தில்வாரா ஜெயின் கோவில் - கி.பி 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் பளிங்கு கற்களால் கட்டப்பட்டதாகும்.

மேலும் இங்கு காண ஓம் சாந்தி பவன், அற்புத தேவி கோவில், சூரிய அஸ்தமனம் பாயிண்ட் என பல இடங்கள் உள்ளன. ஒரு நீண்ட ஹாலிடேவிற்கு திட்டமிடுங்கள்.