ஹக் தினம் - அரவணைப்பின் அடையாளம்!
காதலர் தன வாரம் துவங்கிவிட்டது. சாக்லேட் தினம், ரோஜா தினம், டெடி தினம் என காதலர் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கொண்டாட்டம் தான்.
பிப் 14ல் கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு 2 நாட்கள் முன்னதாக ஹக் தினம் கொண்டாடப்படுகிறது.
ஹக் என்பது அன்பின் வெளிப்பாடாக, இதயங்கள் இரண்டும் ஒன்று சேர்வதாகும். மேலும் அரவணைப்பின் அடையாளம் ஆகும்.
இந்த தினம் எப்போது தொடங்கியது என்பது இதுநாள் வரையில் தெரியாத தகவலாகவே உள்ளது.
ஹக் தினம் போன்றவை கொண்டாடப்படுவது, எந்த அளவுக்கு நம் லவ்வர் மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதை உணர வைக்க தான்.
இந்த காதல் வாரத்தில் காதலருக்கு கிடைத்த ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அழகிய தருணம் தான்.
ஹக் டேயில் சந்திக்க முடியாவிட்டால், வாட்ஸ் அப், இன்ஸ்டாவில் ஸ்டிக்கர்கள், ஜிப்கள், என ஆன்லைன் மூலம் வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.