என் அப்பார்ட்மெண்ட் தோட்டத்தில்… ஃபிளாட்டிலும் பிளான் பண்ணலாம்!
அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பால்கனி மற்றும் ஜன்னல் பகுதிகளில், செடிகள் வளர்க்கலாம்.
பால்கனி மற்றும் ஜன்னலில் கிரீன் மேட்டை பயன்படுத்தி, வீடுகளில் சூரிய வெளிச்சம் வராத வகையில் கவர் செய்யலாம்.
இதனால், சூரிய ஒளியிலிருந்து வீட்டிற்குள் வெப்பம் வருவதை தடுக்கலாம்.
மேலும், வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் காற்று ஈரப்பதம் வாய்ந்ததாக இருக்கும்.
குறைந்தளவு சூரிய ஒளியில் வளரும் செடிகளான, மணி பிளாண்ட், துளசி, புதினா, கற்றாழை, திருநீற்றுப்பச்சிலை ஆகிய காற்றை சுத்தப்படுத்தும், 'இன்டோர்' செடிகளை வளர்க்கலாம்.
சூரிய வெளிச்சம் தேவைப்படும் செடிகள், குறைந்த நேர சூரிய ஒளி தேவைப்படும் செடிகள், சூரிய ஒளியே தேவைப்படாத செடிகள் என, இந்த மூன்று வகை செடிகளை வீட்டிற்குள் மாற்றி மாற்றி வளர்க்கலாம்.
இதன் மூலம் சுத்தமான காற்று, மன அமைதி, பொழுதுப்போக்கு, ஆரோக்கியம் என நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.