சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத சில கோயில்கள்!
கபாலீஸ்வரர் கோயில் : மைலாப்பூரில் இந்த கோயில் 7ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது . சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலங்களில் இது 257வதாகும்.
பார்த்தசாரதி கோயில் : இந்த கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் 8 நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடி உயர மூலவர் சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக சிறப்பு.
வடபழனி முருகன் கோயில்:பழனியில் உள்ள முருகனைப் போலவே இங்குள்ள முருகனும் உள்ளதால், இது வடபழனி என்று அழைக்கப்படுகிறது.
காளிகம்மபாள் கோயில்:கோயில் சென்னை பாரிமுனையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தெய்வம் தற்போது சாந்த சொரூப காமாட்சி அவதாரமாக காட்சியளிப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.
அருள்மிகு கந்தசாமி கோவில்: சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. வள்ளலார் திருவருட்பாவில் பாடிய தலம் இது.
மருதீஸ்வரர் கோவில்: சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த சிவதலம் மருதீஸ்வரர் கோயில். 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
திருநீர்மலை மலைக்கோயில்:குரோம்பேட்டையிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் இந்த மலைக்கோயில் உள்ளது. திவ்விய தேசங்களில் ஒன்று. இந்த பெருமாள் கோயில் ஒரு சிறிய குன்றின் உச்சியில் வீற்றுள்ளது.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்: நங்கநல்லூர் பகுதியில் அமையப்பெற்றுள்ளது இந்த ஆஞ்சநேயர் கோயில். இங்கு உள்ள ஆஞ்சநேயர் சிலை 32 அடி உயரம், 10 அடி சுற்றளவு, 10 அடி அகலம், 150 டன் எடை கொண்டது.