பயணத்தின் போது உண்டாகும் அசவுகரியத்தை தவிர்க்க !
கார், விமானம், படகு அல்லது ரயிலில் பயணம் செய்வது
பலருக்கும் உற்சாகமான அனுபவமாக இருப்பினும், ஒரு சிலருக்கோ பயணித்தாலே
ஒருவித அசவுகரியம் உண்டாகும்.
குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் காரணமாக ஒரு சிலருக்கு பயணங்கள் பரிதாபமாக இருக்கக்கூடும். இதற்கான சில தீர்வுகள் இதோ...
காரில் பயணிக்கும்போது முன் இருக்கையில் அமர்ந்து அடிவானத்தைப் பார்க்கவும். விமானம், ரயில் என்றால் நிலையான, தொலைதூரப் பொருட்களைப் பார்க்கலாம்.
படிப்பதையோ, ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்ப்பதையோ அல்லது அருகிலுள்ள பொருட்களைப் பார்ப்பதையோ தவிர்க்கவும்.
நீரேற்றமாக
இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதேவேளையில், பயணிக்கும்
முன்னதாகவோ அல்லது பயணத்தின் போதோ அதிக உணவை உட்கொள்வதை முடிந்தளவு
தவிர்க்கவும்.
புதிய காற்றை சுவாசிக்க ஜன்னல்களை திறந்து வைக்கவும். வழியில் ஏதாவது கடும் துர்நாற்றம் இருந்தால் முடிந்தளவு தவிர்க்கவும்; அவை குமட்டல் உணர்வுகளை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
பயணத்திற்கு முன் இஞ்சி டீ. இஞ்சி மிட்டாய்கள் உட்கொள்வது
வயிற்றை சரி செய்ய உதவும். ஆரஞ்சு மற்றும் ஆரஞ்சு மிட்டாய்கள் குமட்டல்
உணர்வை கட்டுப்படுத்தும்.