ஆயுளை காவு கேட்கும் காற்று மாசு... அதுவும் டில்லிவாசிகளுக்கு 12 ஆண்டு !
காற்று மாசடைந்து வருவது மனித சமூகத்துக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மேலும், மனிதனின் சராசரி ஆயுள் காலத்தையும் குறைத்து வருகிறது.
நாம் வாழும் பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலத்தில் 79% நைட்ரஜனும், 20% பிராண வாயுவும் (ஆக்ஸிஜன்), 3% கரியமில வாயுக்களும் உள்ளன.
உலகம் முழுவதும் தொழில்மயமாதல், நவீனமயமாதல் ஆகியவற்றால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று அசுத்தமடைவது குறிப்பிடத்தக்கது. தற்போது சிகாகோ பல்கலைக்கழகம் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்துள்ளது. அதன்படி...
வட இந்திய சமவெளிகளில் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றான டில்லியில் வசிக்கும் 1.8 கோடி மக்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகள் குறைகிறது.
இந்தியாவின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான டில்லி, உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. டில்லியில் 40% அதிகமாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி, சுவாச பிரச்னைகளை தூண்டக்கூடிய பி.எம்., நுண்துகள்கள், கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.
சமீபத்திய ஆண்டுகளில் காற்று மாசை கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அனுமதிக்கப்பட்ட அளவை எட்டுவதற்கு இன்னும் தீவிர நடவடிக்கை தேவை.
உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி படி, பி.எம்., - 2.5 எனப்படும் நுண்துகள்கள், 1 கன மீட்டருக்கு, 5 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டும். இது, இந்தியாவில் 2022ல், 9 மைக்ரோ கிராமாக உள்ளது.
கடந்த 2021 உடன் ஒப்பிடுகையில், 19.3 சதவீதம் குறைந்துள்ளது என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.