உங்களின் திருமண வைபவத்துக்கு உகந்த சில இடங்கள் !

ரிஷிகேஷ்... கங்கை நதியால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த ஆன்மிக பூமியில் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய பலரும் விரும்புகின்றனர்.

கேரளா... புதிய வாழ்க்கையை துவக்க விரும்புவோரின் பட்டியலில் ஒன்றாக உள்ள, கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா கடற்கரை திருமணத்துக்கான இடமாகவும் உள்ளது.

ஆக்ரா... அன்பின் உருவகமான அழகிய தாஜ்மஹாலின் பின்னணியில் திருமண வாழ்வை துவக்க, இளசுகளிடம் பலத்த வரவேற்பு உள்ள இடம் இது.

ஜோத்பூர்... இங்குள்ள கம்பீரமான மற்றும் பழமையான அரண்மணையில் திருமணம் செய்வது பலரின் தீராக்கனவாகும்.

சிம்லா... உலகம் முழுவதிலுமிருந்து தம்பதிகளை வெகுவாக ஈர்க்கும் இடம் இது. பனி படர்ந்த மலைகள் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது.

கோவா... நினைத்தாலே மகிழ்ச்சி அளிக்கும் இடங்களில் இது ஒன்று. பீச் வெட்டிங் என்றாலும் சரி, ஹனிமூன் என்றாலும் சரி பலரின் ஃபேவரீட் இடமாக இது உள்ளது.

ஜெய்ப்பூர்... கம்பீரமான அரண்மனையில் திருமணம் செய்யக்கூடிய மற்றொரு இடமாக உள்ளது ஜெய்ப்பூர்.

திருப்பதி... ஆன்மிக தளத்தில் திருமணம் செய்ய விரும்புபவர்களின் லிஸ்டில் இது முக்கிய இடத்தில் உள்ளது.