அன்னையின் அற்புத பொன்மொழிகள்!!
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நல்லவழியில் நடந்தால் வாழ்வில் உயர்வு பெறுவாய்.
கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவது பற்றிக் கற்பனை செய்யாதே.
ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. இதனால் பொறுமை இழந்து முடிவு எடுக்க முடியாமல் தடுமாற நேரிடும்.
கடமையில் விழிப்புடன் செயலாற்று. பலனைக் கடவுளின் பொறுப்பில் விட்டு விடு. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பாய்.
நேர்மையாகப் பணியாற்றுங்கள். வாழ்வில் பத்து மடங்கு முன்னேற்றம் உங்களுக்கு வந்து சேரும்.
நாம் வாழ்வில் முன்னேறுவதற்காகப் பிறந்திருக்கிறோம். அதற்காக கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
உன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் நம்பிக்கை பரவட்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு உன்னால் சாதிக்க முடியும்.