இன்று அம்பேத்கரின் பிறந்த தினம்!
சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம்! அதை இழந்து வாழ்வது மிகப் பெரிய அவமானம்.
மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமானால் அரசியல் அமைப்பு மக்களின் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைத் தீர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
யார் ஒழுக்கமும் நேர்மையும் உடையவராய் சமுதாயத்துக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறாரோ அவர்தாம் தொண்டு செய்யத் தகுதியானவர்.
வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல், பாராட்டை எதிர்பாராமல் கடமையைச் செய்யுங்கள்!
உங்கள் போராட்டம் நீங்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்குத்தானேயன்றி பணம் பதவிகளுக்காக அல்ல!
உங்கள் திறமையை, நேர்மையைக் கண்டு எதிரியும் உங்களை மதிக்க முன்வருவான்!