வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? இணையதளத்தில் அறியலாம்!
ஓட்டுச்சாவடிகளில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என, இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு இல்லாதவர்கள், தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்த ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.
வாக்களர் பட்டியலில், வாக்காளர் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப், ஓட்டுச்சாவடியில் அடையாள ஆவணமாக ஏற்கப்படாது
ஒரு வாக்காளர் மற்றொரு சட்டசபை தொகுதியின் வாக்களர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை ஆவணமாக பயன்படுத்தலாம்.
ஆனால், அந்த வாக்காளர் பெயர், அந்த ஓட்டுச்சாவடிகுரிய பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.மேலும், ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டும் ஒருவரால் ஓட்டளிக்க முடியாது.
ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே ஓட்டளிக்க முடியும்.
வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, https://electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர், வரிசை எண், ஓட்டுச்சாவடி தகவல் ஆகியவற்றை அறியலாம்.