மீன் எண்ணெய் மாத்திரையை யார் யார் சாப்பிடலாம்?
வைட்டமின் ஏ, டி ஆகிய ஊட்டச்சத்துகளும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் மிகப் பெரிய மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் (Cod liver oil) உள்ளன.
மீன் எண்ணெய் மாத்திரையிலுள்ள சத்துகள் குழந்தை கண் நோய்களைப் போக்க உதவும். முதியோருக்கு ஏற்படுகிற பார்வைக் கோளாறைத் தள்ளிப்போட உதவும்.
மூட்டு வலி மற்றும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சருமப் பாதுகாப்பு கிடைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும்.
இந்த மாத்திரை ஒருவித சத்து மாத்திரைதான் என்றாலும் அதையும் தேவையில்லாமல் சாப்பிடக்கூடாது.
ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்து தான் இந்த மாத்திரைகளை சாப்பிடலாமா, வேண்டாமா என்பதைக் கூற முடியும்.
எனவே, இந்த மாத்திரைகளை சாப்பிடத் துவங்கும் முன் கட்டாயமாக டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
மீன் மாத்திரையிலுள்ள நற்குணங்கள் சமைத்த மீன்கள், கேரட், தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்டவற்றில் உள்ளன. எனவே இவற்றை மீன் மாத்திரைக்கு மாற்றாக சாப்பிடுவதும் நல்லது.