பிங்க் நிற லெஹங்காவில் அசத்திய சாரா டெண்டுல்கர்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டனில் மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும், பேஷன் மற்றும் மாடலிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கேற்ப இவரின் இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரேவின் புதிய திருமண அலங்கார தொகுப்பான, 'Homage An Ode To You' என்ற பேஷன் நிகழ்ச்சியில் கண்ணைப்பறிக்கும் பிங்க் நிற லெஹங்காவுடன் அசத்தியுள்ளார்.

பாரம்பரியத்தை பறைச்சாற்றும் வகையில் எம்பிராய்டரியில் பல வண்ண மலர் வடிவங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது இந்த லெஹங்கா

சாராவின் இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.