மழைக்காலமும் தனிமனித பராமரிப்பும்!!

மழை காலத்தில், வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது, நீங்கள் அதிக அளவு தொற்று கிருமிகளை சுமந்து செல்கிறீர்கள்.

காரணம், சாக்கடை நீர், மழை நீரோடு கலந்து உங்கள் கால்களை நனைத்திருக்கலாம். எனவே, வீட்டுக்குள் நுழைந்தவுடனே கை, கால்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

காரணம், சாக்கடை நீர், மழை நீரோடு கலந்து உங்கள் கால்களை நனைத்திருக்கலாம். எனவே, வீட்டுக்குள் நுழைந்தவுடனே கை, கால்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்

வெளியிலிருந்து உள்ளே நுழைந்ததும் உடை மற்றும் காலணிகளை உலர்ந்த பகுதியில் வையுங்கள்.

சிலருக்கு சுவரில் சாய்ந்து கொள்ளும் பழக்கம் இருக்கும். மழை காலத்தில் இதை தவிர்க்க வேண்டும். சுவரின் ஈரப்பதம் உங்களையும் பாதிக்கும்.

மழை காலத்தில் தினமும் இருமுறை குளித்தல் நல்லது. பச்சை தண்ணீர், வெந்நீர் என, உங்கள் விருப்பம் போல் குளிக்கலாம்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், உங்கள் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும்

மழை காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அப்படியே விட்டு விடாமல், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.