பூமியை விட்டு விலகிச் செல்லும் நிலவு!

சமீபத்தில் நாசா வெளியிட்ட அறிக்கையில் நிலவு பூமியை விட்டு விலகி செல்வதாக தெரிவித்துள்ளது.

இது வருடத்திற்கு 3.8 சென்டிமீட்டர் அளவு பூமியை விட்டு விலகி செல்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜெய்ன்ட் இம்பாக்ட் தியரியின் படி சுமார் 450 கோடி வருடங்களுக்கு முன்னர் ஒரு சிறிய கோள் பூமியின் மேல் மோதியது.

பின்பு அது பூமியை சுற்ற தொடங்கி பிற்காலத்தில் நிலவாக மாறியது.

பல கோடி வருடங்களாக பூமியுடன் இருந்த நிலவு, தற்போது விலகிச் செல்வதற்கான காரணமாக அதனுடைய புவி ஈர்ப்பு விசையே அமைந்துள்ளது.

பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நிலவு பூமியினை சுற்றி வருகிறது.

அதே நேரத்தில், நிலவில் இருக்கும் புவி ஈர்ப்பு விசையும் பூமியை ஈர்க்கும். இதனால், ஆழிப் பேரலைகள் உருவாகும்.

இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழும் போது 'கிக் பேக் எபெக்ட்' காரணமாக நிலவு விலகிச் செல்கிறது.

இவ்வாறு நடப்பதனால் பூமிக்கு ஏற்படும் பெரும் பாதிப்பாக பகல் நேரத்தின் நீளம் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.

10,921 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலவுக்கும் அது சுற்றும் பூமிக்கும் இடையில் சுமார் பூமி அளவிலான 30 கோள்களை வைக்க இயலும்.