பனிபடர்ந்த நைனிட்டால்.. உத்ராஞ்சலில் ஓர் இன்ப உலா...!

உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத்தலம் நைனிட்டால்.

மாநில தலைநகர் டெஹ்ராடூனில் இருந்து 280 கிமீ தொலைவில் உள்ள பனிபடர்ந்த நைனிட்டால், இமயமலைத் தொடரின் கடைசி எல்லையில் அமைந்துள்ளது.

இங்கு சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் என்னென்ன எனப் பார்ப்போமா?

நைனிட்டால் நகரின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்வது நைனி ஏரி.

இமய மலையின் இடையே சூரியன் உதிப்பதை நைனிடாலின் டிஃபன் டாப் மலை உச்சியில் அதிகாலையில் கண்டு களிக்கலாம்.

பாரம்பரிய கைவினைப் பொருட்கள், முகமுடிகள், ஷால்கள், ஆடைகள், ஆபரணங்கள் என குவிந்து கிடக்கும் திபெத்திய மார்கெட்டில் ஷாப்பிங் செல்ல சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர்.

மலிட்டல் பகுதியில் இருந்து ஸ்னோ வியூ பகுதிவரை செல்லும் ரோப் கார்கள் இங்கு பிரபலம்.

நைனிட்டால் நகரை ரட்சிக்கும் தெய்வமாக இங்குள்ள கோவிலில் நைனா தேவி மாதா கருதப்படுகிறார்.

நைனிட்டாலின் பாங்கோட் கிராமத்தில் அமைந்துள்ள பறவை சரணாலயத்தில், அரிய வகை பறவைகளுடன் புகைப்படம் எடுக்கலாம்.