பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் !
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்.
1 கோடி வீடுகளில் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளை அதிகரிப்பது தொடர்பாக தனிக்குழு அமைக்கப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
கர்ப்பப்பை கேன்சரை தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.